2.5 மில்லியன் டொலர் திருட்டு : நிதி அமைச்சிற்கு முன்பாக வெடித்த போராட்டம்
இலங்கை திறைசேரி வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்திய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வேறொரு தரப்பின் கைக்குச் சென்ற சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
சர்வஜன அதிகாரத்தின் ஏற்பாட்டில் நிதி அமைச்சின் வளாகத்திற்கு முன்பாக இன்று (27) காலை குறித்த போராட்டம் நடைபெற்றது.
அத்துடன் சிறிலங்கா பொதுஜன பெரமுனவும் இச்சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று காலை இலங்கை மத்திய வங்கிக்கு முன்பாகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது.
மத்திய வங்கிக்கு முன்பாக போராட்டம்
இதேவேளை, இந்த விவகாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேலும் பல போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் 'அரகலயவின் பிரஜைகள்' அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு போராட்டமும் இன்று மத்திய வங்கிக்கு முன்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
முகமாலை நவீன போரியல் விதிகளை மாற்றியமைத்த ஈழத்து ஸ்டாலின்கிராட் 1 மணி நேரம் முன்