சிறிலங்கா அரசாங்கத்தை ஆதரிக்க தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில நல்ல யோசனைகள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தெரியப்படுத்த குறித்த குழுவினர் தீர்மானித்துள்ளதாக தகவலறிந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கட்சியின் ஒரு சில உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இது தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்
இதில் தென் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் சிரமங்களை எதிர்நோக்கும் நெருக்கடியான நிலையில், வரவு செலவுத் திட்டத்தில் உள்ள நல்ல முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்களிப்பது அசாதாரணமானது என மேலும் கூறப்பட்டுள்ளது.