ட்ரம்பின் VRS திட்டத்தில் இணைந்த அமெரிக்க அரச ஊழியர்கள்
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்(donald trump) ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முன்மொழியப்பட்ட, தானாக முன்வந்து ஓய்வு பெற ஒப்புக்கொள்ளும் அரசு ஊழியர்களுக்கு எட்டு மாத சம்பளம் வழங்கும் சிறப்புத் திட்டத்தில் 40,000 அமெரிக்கர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 30 ஆம் திகதி வரை சம்பளத்துடன் பதவி விலகல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று (06)வெள்ளை மாளிகை இந்த அறிவிப்பை வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இரண்டு லட்சம் அமெரிக்க அரசு ஊழியர்கள்
ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தில் இருந்து சுமார் இரண்டு லட்சம் அமெரிக்க அரசு ஊழியர்கள் பதவி விலகல் செய்வார்கள் என்று வெள்ளை மாளிகை முன்பு எதிர்பார்த்ததாகவும், இதில் 10% அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் முடிவு அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களில் 2% பேர் மட்டுமே விண்ணப்பம்
இருப்பினும், நேற்றுடன் முடிவடைந்த தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்திற்கு நாட்டின் 2.3 மில்லியன் அரசு ஊழியர்களில் 2% பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த சில மணிநேரங்களில் அந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று வெள்ளை மாளிகை எதிர்பார்க்கிறது என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)