டுபாயில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள 42 இலங்கை பெண்கள்!
Dubai
Foreign Employment Bureau
By Kathirpriya
டுபாயில் பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளான வீட்டுப்பணிப்பெண்களாக பணிபுரிந்த 42 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த செய்தியை துபாயில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
10 பணிப்பெண்களைக் கொண்ட குழு ஒன்று இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் டுபாயில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மத்திய நேர செய்தித் தொகுப்பில் காணுங்கள்