ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம்

Donald Trump Iran-US Conflict
By Dharu Jun 24, 2026 08:57 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு அளித்துள்ள ஈரான் ஒப்பந்தம் தொடர்பாக வளைகுடா நாடுகளின் கவலைகளைத் தீர்க்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது மூன்று நாள் மத்திய கிழக்கு சுற்றுப்பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இதற்கமைய நேற்று(23.06.2026) இரவு அபுதாபி வந்தடைந்த ரூபியோ, ஈரானுடனான நான்கு மாத கால அமெரிக்கா - இஸ்ரேல் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் ஒப்பந்தம் குறித்து பிராந்திய நட்பு நாடுகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

ஈரானுக்கு முன்மொழியப்பட்டுள்ள 300 பில்லியன் டொலர் புனரமைப்பு நிதி தொடர்பாக வளைகுடா நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.

அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச குழு: அமெரிக்கா - ஈரான் இடையே முரண்பாடு

அணுசக்தி நிலையங்களை ஆய்வு செய்ய சர்வதேச குழு: அமெரிக்கா - ஈரான் இடையே முரண்பாடு

ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை

அந்த நிதி, ஈரான் தனது இராணுவ வலிமையை மீண்டும் கட்டியெழுப்ப பயன்படுத்தப்படலாம் என்ற அச்சம் அவற்றிடம் நிலவுகிறது.

ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம் | Rubio Middleeast Visit Begins Amid Iran Tensions

மேலும், ஒப்பந்தத்தில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டம் குறித்து எந்தத் தெளிவான ஏற்பாடும் இடம்பெறாதது கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அபுதாபியில் செய்தியாளர்களிடம் பேசிய ரூபியோ, கூட்டாளி நாடுகளின் கவலைகள் தொடர்பான விவாதங்கள் இந்தச் சந்திப்புகளில் இடம்பெறும் என தெரிவித்தார். ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத முக்கிய அம்சங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் ஈரானிய பிரதிநிதிகளுடன் நேரடி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த நிலையில், ரூபியோ இந்த விவகாரத்தில் முதல் முக்கிய இராஜதந்திரப் பயணத்தை மேற்கொள்கிறார்.

டொலர்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஈரானுக்கு அமெரிக்கா அனுமதி!

டொலர்களில் எண்ணெய் வர்த்தகம் செய்ய ஈரானுக்கு அமெரிக்கா அனுமதி!

அமெரிக்காவின் இராணுவத் தளங்கள்

இந்தப் பயணத்தின் போது அவர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத் உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்லவுள்ளார். இந்நாடுகளில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் அமைந்துள்ளதுடன், சமீபத்திய மோதலின்போது ஈரானிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஈரான் பதற்றத்துக்கு மத்தியில் ரூபியோவின் மத்திய கிழக்கு விஜயம் ஆரம்பம் | Rubio Middleeast Visit Begins Amid Iran Tensions

இதற்கிடையில், வளைகுடா நாடுகள் மீது தாக்குதல்களை நடத்தும் நோக்கில் ஈரான், ஈராக்கில் புதிய இரகசிய ஆயுதக் குழுக்களை உருவாக்கியுள்ளதாக கடந்த வாரம் வெளியான தகவல்கள் மேலும் பாதுகாப்பு அச்சங்களை அதிகரித்துள்ளன.

ரூபியோவின் இந்தப் பயணம், டிரம்ப் நிர்வாகத்தின் ஈரான் கொள்கைக்கு பிராந்திய ஆதரவைப் பெற்றுத் தருவதிலும், வளைகுடா நாடுகளின் பாதுகாப்பு கவலைகளை சமாளிப்பதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஈரான் மீதான் தடை நீக்கம் : உலக சந்தையில் தொடர்ந்து குறைவடையும் கச்சா எண்ணெய் விலை

ஈரான் மீதான் தடை நீக்கம் : உலக சந்தையில் தொடர்ந்து குறைவடையும் கச்சா எண்ணெய் விலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024