6 நாட்களில் இலங்கைக்கு வந்து குவிந்த சுற்றுலாப் பயணிகள்
ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் இலங்கைக்கு 42,810 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாக சபையின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அண்மைய தரவுகளில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது
சுற்றுலாப் பயணிகள்
குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, இது மொத்த வருகையில் 18% ஆகும்.

அதேபோல், சீனாவில் இருந்து 3,031 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து 4,922 பேரும், பிரான்சில் இருந்து 3,908 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வந்துள்ளனர்.
மேலும், 2026 ஜனவரி 01 முதல் ஓகஸ்ட் 06 வரையிலான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,228 ஆகப் பதிவாகியுள்ளது.
அவர்களில் இந்தியாவில் இருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 135,323 பேரும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |