ஏப்ரல் மாதம் காணாமல் போன 43 வயது நபர்: காவல்துறையினருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை
மீகஹதென்ன பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியேறிய பின்னர் காணாமல் போன 43 வயதுடைய நபரைக் கண்டறிய பொதுமக்களின் உதவியைப் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
காணாமல் போனவர், மீகஹதென்ன, புவகஹஹேன பகுதியைச் சேர்ந்த விக்ரமநாயக்க கருணாரத்னகே தர்ஷன திவங்க எனப் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காணாமல் போனவரின் தந்தை அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், மீகஹதென்ன காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை
கடந்த ஏப்ரல் மாதம் மன்னம்பிட்டிய மற்றும் வெலிகந்த பகுதிகளுக்குச் செல்வதாகக் கூறி வீட்டிலிருந்து வெளியேறிய அவர், அதன் பின்னர் எவ்வித தகவலும் இன்றி காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் சுமார் 5 அடி 4 அங்குல உயரம் கொண்டவர் எனவும், மாநிறமான தோற்றம், மெலிந்த உடல்வாகு மற்றும் குட்டையான தலைமுடியைக் கொண்டவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறிவிக்குமாறு காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மீகஹதென்ன காவல்துறை பொறுப்பதிகாரி: 071-8591706
- மீகஹதென்ன காவல்துறை நிலையம்: 034-2284022
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹதென்ன காவல்துறை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |