ஆப்கானில் 06 வயது சிறுமிக்கு 45 வயது நபருடன் திருமணம் : தலிபான்கள் அளித்த தீர்ப்பால் வெடித்தது சர்ச்சை
ஆப்கானிஸ்தானின் (afghanistan)ஹெல்மந்த் மாகாணத்தில் ஆறு வயது சிறுமியை, 45 வயது நபர் திருமணம் செய்த நிலையில், தலிபான்கள் தலையிட்டு அளித்த தீர்ப்பு உலகளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
45 வயது நபருக்கு திருமணம் செய்துகொள்ள, 6 வயது சிறுமி பணத்துக்கு விற்பனை செய்யப்பட்டது குறித்த செய்தி அமெரிக்காவில் தலைமையிடத்தைக் கொண்டு இயங்கும் ஊடகத்தில் ஜூன் 28ஆம் திகதி முதல் முறையாக வெளியானது.
கடன் தொல்லையால் மகளை விற்ற தந்தை
அந்த நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், கடன் தொல்லை காரணமாக, சிறுமியின் தந்தை, அந்த நபருக்கு மகளை விற்றதாகவும் கூறப்படுகிறது.
தலிபான்கள் அளித்த தீர்ப்பால் வெடித்தது சர்ச்சை
இது உலகளவில் பேசப்பட்ட நிலையில், தலிபான் அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்தால், திருமணத்தை நிறுத்தவோ, அந்த நபரை கைது செய்யவோ இல்லை. மாறாக, தலிபான் அதிகாரிகள், திருமணம் செய்துகொள்ளுங்கள், சிறுமியை 9 வயதுக்குப் பிறகு அவரது வீட்டிலிருந்து அழைத்து வாருங்கள் என்று அறிவுரை கூறியிருக்கிறது.
Afghanistan man marries 6 year old girl before Taliban intervene and say he must wait until she is 9.
— Treeni (@TheTreeni) July 9, 2025
UN reports a 25% rise in child marriages in Afghanistan after the Taliban banned girls' education, and a 45% increase in child bearing across the country. pic.twitter.com/NFyWoBYpJL
கடந்த 2021ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில், தலிபான் ஆட்சி அமைந்ததிலிருந்து, அந்நாட்டில் வாழும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருவது உலகளவில் எதிர்ப்பை எழுப்பி வந்திருக்கும் நிலையில், 9 வயதில், சிறுமியை கணவர் வீட்டுக்கு அழைத்து வரலாம் என தலிபான் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
