யாழில் அத்துமீறிய 47 இந்திய கடற்றொழிலாளர்கள் அதிரடியாக கைது
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 47 இந்தியக் கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, வடக்கு கடற்பிராந்தியத்தில் தலைமன்னார் மற்றும் நெடுந்தீவு ஆகிய பகுதிகளை அண்மித்த கடலில் இன்று அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் 5 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
விசாரணைகள் முன்னெடுப்பு
தலைமன்னார் கடற்பரப்பில் 4 படகுகளுடன் 30 இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் படகொன்றுடன் 17 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கடற்றொழிலாளர்களைக் கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.
விசாரணைகளின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக, இந்தியக் கடற்றொழிலாளர்கள் 47 பேரும், கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
