இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கிய அதிகாரிகள்!
2025 ஆம் ஆண்டின் முதல் 7 மாதங்களில் இலஞ்சம் பெறப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery or Corruption) தெரிவித்துள்ளது.
குறித்த காலகட்டத்தில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடத்தப்பட்ட சுற்றிவளைப்புகள்
அதன் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்ட நிலையில் அவற்றில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிகளவில் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் காவல்துறை திணைக்களத்தில் பதிவானதுடன், இதுவரை 17 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் கடமையாற்றியவர்களும் அவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த காலங்களில் இலஞ்ச வழக்குகள் தொடர்பாக 27 நபர்களை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
