ஐந்து சிறுமிகள் தப்பியோட்டம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
மெட்டியகொட பிரதேசத்தில் சிறுவர் இல்லமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த ஐந்து சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளதாக மெட்டியகொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் நேற்று (29) பிற்பகல் தப்பிச் சென்றுள்ளதாக மெட்டியகொட காவல்துறையினருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
எந்த தகவலும் இல்லை
தப்பிச் சென்ற சிறுமிகள் 17, 14 மற்றும் 13 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் படபொல, கொழும்பு, ஹிக்கடுவ, எல்பிட்டிய மற்றும் நெலுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய சிறுமிகள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.