இந்திய - பாகிஸ்தான் மோதலில் சுட்டுவீழ்த்தப்பட்ட ஐந்து ஜெட் விமானங்கள்: ட்ரம்ப் அறிவிப்பால் பரபரப்பு
இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இஸ்லாமிய ஆயுத குழுக்களின் தாக்குதலுக்குப் பிறகு தொடங்கிய இந்தியா-(india)பாகிஸ்தான்(pakistan) சண்டையின் போது ஐந்து ஜெட் விமானங்கள் வரை சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) நேற்று(18) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளை மாளிகையில் சில குடியரசுக் கட்சி அமெரிக்க சட்டமன்ற உறுப்பினர்களுடன் இரவு விருந்தின்போது தனது கருத்துக்களை தெரிவித்த ட்ரம்ப், எந்தப் பக்கத்தின் ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்பதை குறிப்பிடவில்லை.
ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
"உண்மையில், விமானங்கள் வானிலிருந்து சுடப்பட்டன. நான்கு அல்லது ஐந்து, ஆனால் உண்மையில் ஐந்து ஜெட் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று நான் நினைக்கிறேன்," என்று ட்ரம்ப் இந்தியா-பாகிஸ்தான் சண்டைகள் பற்றிப் பேசும்போது, மேலும் விவரங்களை வழங்காமல் கூறினார்.
பாகிஸ்தான் ஐந்து இந்திய விமானங்களை வான்வழிப் போரில் சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது. இந்தியாவின் உயர் பதவியில் உள்ள ஜெனரல் மே மாத இறுதியில், முதல் நாள் போர்களில் வான்வழி இழப்புகளைச் சந்தித்த பிறகு இந்தியா தந்திரோபாயங்களை மாற்றியதாகவும், மூன்று நாட்களுக்குப் பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு அனுகூலத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
பாகிஸ்தான் மறுப்பு
பாகிஸ்தானின் "சில விமானங்களை" சுட்டு வீழ்த்தியதாக இந்தியாவும் கூறியது. எனினும் தமது விமானங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று இஸ்லாமாபாத் மறுத்தது, ஆனால் அதன் விமானத் தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
