கொழும்பு துறைமுகத்தில் சிக்கிய சொகுசு வாகனங்கள்
Port of Colombo
Sri Lanka
By Sumithiran
உதிரிப்பாகங்கள் எனத் தெரிவித்து ஜப்பானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட நான்கு மிட்சுபிஷி ஜீப் வண்டிகளும் சுபாரு ரக கார் ஒன்றும் இலங்கை சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை சுங்க திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த 5 கார்களின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் இருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த 5 கார்களும் இலங்கை சுங்கத்திற்கு கார் உதிரி பாகங்களாக பிரகடனப்படுத்தப்பட்ட கொள்கலனில் கவனமாக கொண்டு வரப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி