இரசாயன கழிவுகளை அகற்றுவதற்கு இலங்கைக்கு கிடைத்த 5 மில்லியன் டொலர்
இலங்கையில் (Sri lanka) இரசாயன கழிவுகளை அகற்றும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றாடல் அமைச்சுக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்திற்கும் உலகளாவிய சுற்றாடல் வசதிகள் நிதியம் இந்த நிதியை வழங்கியுள்ளது.
தொடர்ச்சியான இயற்கை மாசுப்படுத்திகள் அல்லது பாதரசம் கொண்ட பொருட்களை இலங்கை உற்பத்தி செய்வதில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை இறக்குமதி செய்தல்
இருந்த போதிலும் இந்த வகையான உள்ளீடுகளைக் கொண்ட பல பொருட்கள், ஒவ்வொரு ஆண்டும், பல்வேறு பயன்பாடுகளுக்காக, நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் கடுமையான விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதில் திறன் இல்லாமையால் இரசாயன இறக்குமதிகள் தொடர்ந்தும் தவறாக நிர்வகிக்கப்படுவதாக இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |