கொவிட் தொற்றினால் தாயாரின் வயிற்றுக்குள்ளேயே வாழ்வை முடித்த 5 மாத சிசு
corona
baby
death
By Sumithiran
கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாயின் வயிற்றிலிருந்த ஐந்து மாத சிசுவும் கொவிட் தொற்றினால் உயிரிழந்த பரிதாப சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
கம்பளை வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கம்பளை பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணொருவர், கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அனுமதிக்கப்பட்ட பெண், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது வயிற்றிலிருந்த ஐந்து மாத சிசு வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிசுவை, சத்திர சிகிச்சையின் மூலம் வைத்தியர்கள் வெளியில் எடுத்துள்ளனர்.இதன்போது சிசுவுக்கும் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. சிசுவின் இறுதிக் கிரியைகள் கம்பளையில் நேற்று (25) இடம்பெற்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி