ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி நிச்சயம்: அனுர உறுதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீத வாக்குகளை தமது கட்சியால் நிச்சயமாகப் பெற முடியும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு நேற்றையதினம் (31) வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எத்தனை ஜனாதிபதி வேட்பாளர்கள் முன்வைக்கப்பட்டாலும், வாக்காளர்கள் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டு பிரதான வேட்பாளர்களை மட்டுமே மையப்படுத்துவார்கள் என்றும் அனுர குமார சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் வெற்றி
அதன்படி, இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு இடையே தேசிய மக்கள் சக்தி இருப்பதாகத் தெரிவித்த அவர், அதிக வாக்குகளைப் பெற்று தமது கட்சி நிச்சயமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த ஜனாதிபதித் தேர்தல் போட்டியானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவிற்கு இடையில் இடம்பெறாது என்றும் ரணிலுக்கும் தேசிய மக்கள் சக்திக்கு இடையிலேயே இடம்பெறும் என்றும் அனுர குமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |