லண்டனில் பாரிய போராட்டம் 500 பேர் கைது
United Kingdom
Palestine
By Sumithiran
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பிரிட்டனின் லண்டனில் நடந்த போராட்டத்தில் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்புக்கு ஆதரவை தெரிவித்ததற்காக மக்கள் கைது செய்யப்பட்டதாக லண்டன் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாலஸ்தீன ஆதரவு போராட்டமான "பாலஸ்தீன நடவடிக்கை"யின் ஏற்பாட்டாளர்கள் பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பு என்று வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெயினின் பார்சிலோனாவிலும் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்
இதற்கிடையில், ஸ்பெயினின் பார்சிலோனாவிலும் நேற்று பாலஸ்தீன ஆதரவு போராட்டம் நடைபெற்றது.
சுமார் 70,000 பேர் கூடியிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் 20 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி