548 விமானங்கள் தாமதம்: மொத்தமாக வெளியான அறிக்கை
கடந்த 17 மாதங்களில் 548 சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் 3 முதல் 59 மணி நேரம் வரை தாமதமாகியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த விடயமானது, தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி தெரியவந்துள்ளது.
2022/2023 நிதியாண்டில் விமான தாமதங்கள் மற்றும் இடையூறுகள் காரணமாக விமான நிறுவனத்திற்கு ஏற்பட்ட மொத்த செலவு 784,000 அமெரிக்க டொலர்கள் என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
பிரச்சினைகளுக்கு தீர்வு
இதேவேளை, மாற்று விமானங்களை சரியான நேரத்தில் பெறத் தவறியது, பயன்படுத்த முடியாத இயந்திரங்கள், விமான உதிரி பாகங்களைப் பெறுவதற்கு நீண்ட நேரம் எடுத்தது மற்றும் நிறுவனத்தின் பணப்புழக்க நிலைமை ஆகியவை இந்த தாமதங்களுக்கு முக்கிய காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், குறித்த பிரச்சினைகளைத் தீர்க்க பல தொடர்ச்சியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் நிர்வாகம் கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |