முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழை வெள்ளத்தினால் 573 பேர் பாதிப்பு (படங்கள்)
முல்லைத்தீவில் தொடர்சியான மழை வெள்ளத்தினால் 182 குடும்பங்களை சேர்ந்த 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துபிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று, ஒட்டுசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய பிரதேசங்களில் அதிகளவான மக்கள் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
ஒட்டுசுட்டான் பிரதேசத்தின் புளியங்குளம் பண்டாரவன்னி ஆகிய கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, வெள்ள நீர் வடிந்தோடி வருகின்றது.
பண்டாரவன்னி கிராமம்
பண்டாரவன்னி கிராமம் முற்றுமுழுதாக வெள்ளத்தில் முழ்கியுள்ளதால் மக்களின் வீடுகளுக்குள்ளும் வெள்ளநீர் புகுந்துள்ளதுடன் வயல் நிலங்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
பண்டாரவன்னி கிராமத்திற்கு செல்லும் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மக்கள் வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
62 குடும்பங்களை சேர்ந்த 195 பேர் இதில் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளார்கள்.
மேலும், இன்று காலை கிராம சேவையார் உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று மக்களின் விபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
நிவாரண உதவிகள்
புளியங்குளம் கிராமத்தில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதேபோன்று மாங்குளம் பனிக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கலான மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலைய தகவலின் படி ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் 115 குடும்பங்களை சேர்ந்த 379 பேரும், கரைதுறைப்பற்று பிரதேசத்தில் 28 குடும்பங்களை சேர்ந்த 87 பேரும் மாந்தை கிழக்கு பிரதேசத்தில் 39 குடும்பங்களை சேர்ந்த 107 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
இன்று மழை ஓய்ந்து காணப்படுவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நடவடிக்கைகளை வழங்கும் நடவடிக்கையில் அரச திணைக்களங்கள் ஈடுபட்டுள்ளன.
செய்திகளைசெய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |