வவுனியாவில் வீடு முற்றுகை : வசமாக சிக்கிய பாரியளவு போலி தேன்
Poson poya day
Anuradhapura
Vavuniya
Honey
Public Health Inspector
By Jaso
பொசன் பண்டிகைக் காலத்தில் பக்தர்களுக்கு விற்பனை செய்வதற்காக, சீனியைஉருக்கித் தயாரிக்கப்பட்ட 580 லிட்டர் போலியான தேனை, வவுனியாவின் வேப்பங்குளத்தில் பறிமுதல் செய்துள்ளதாக வவுனியா பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
அனுராதபுரம் மற்றும் பிற பகுதிகளில் போலியான தேன் விற்பனை செய்து வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வவுனியா பொது சுகாதார திணைக்களம் நடத்திய திடீர் சோதனையில், சீனியை உருக்கித் தயாரிக்கப்பட்ட இந்த போலித் தேன் பறிமுதல் செய்யப்பட்டது.
மனிதர்கள் உட்கொள்ளத் தகுதியற்ற போலி தேன்
மனிதர்கள் உட்கொள்ளத் தகுதியற்ற, 40 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஏழு செயற்கைத் தேன் கான்களும், தேனீக்கள் விட்டுச்சென்ற தேனீப் பாகங்களும் அந்த வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக பொது சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்