முத்து நகர் விவசாயிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!
திருகோணமலை முத்து நகர் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் சீனக்குடா காவல்துறையின் அத்துமீறிய சம்பவம் தொடர்பில் கொழும்பில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் குறித்த விவசாயிகள் சென்று தங்களது அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக முறைப்பாட்டு அளித்துள்ளனர்.
இதன்பின்னர் முத்து நகர் ஒன்றினைந்த விவசாய சங்கத்தின் செயலாளர் சஹீலா சபூர்தீன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்போது அவர் கருத்து தெரிவித்ததாவது, “முத்து நகர் விவசாயிகளின் காணிகள் சூரிய மின் சக்தி உற்பத்திக்காக கையகப்படுத்தப்பட்டதை அடுத்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடாத்தி வந்தனர்.
காவல்துறையினரின் அத்துமீறல்
இது தொடர்பில் மாற்றுக்காணி வழங்குவதாக கூறினர் ஆனால் தீர்வு தராமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே பிரதமர் ஊடாக தீர்வு வழங்கப்படவில்லை.

எங்களது விவசாய நிலம் இலங்கை துறைமுக அதிகார சபையினால் கையகப்படுத்தி 342விவசாய குடும்பங்களை வீதிக்கு இறங்கியுள்ளனர். தற்போது தொழில் இன்றி பாரிய பொருளாதார சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் இரவு நேரத்தில் சீனக்குடா காவல்துறையினர் தங்கள் விவசாய குடும்பம் ஒன்றின் வீட்டினுள் நுழைந்து அப்பட்டமாக வீட்டை பரிசோதனை செய்துள்ளனர். இது அடிப்படை உரிமை மீறலாகும், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு அறிந்துள்ளோம்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்