யுக்திய நடவடிக்கையில் தமிழர் பகுதியில் 59 பேர் கைது
Sri Lanka Police
Batticaloa
Sri Lanka Police Investigation
By Raghav
மட்டக்களப்பு (Batticaloa) - காத்தான்குடி (Kattankudy) காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 15 ஐஸ் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உட்பட கசிப்பு விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட 59 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு நீதவான்
இதன்போது, ஐஸ் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட 15 பேர், கசிப்பு உற்பத்தி, விற்பனை மற்றும் திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 44 பேர் அடங்கலாக 59 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (20) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்னொரு வேட்பாளரை வெல்ல வைப்பதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகமே தமிழ்ப் பொது வேட்பாளர்! சாணக்கியன் அதிரடி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி