வேகமெடுக்கும் ஒமிக்ரோன் - மூன்று நாட்களில் 5900 விமானசேவைகள் இரத்து
உலகளாவிய ரீதியில் ஒமிக்ரோன் திரிபு வேகமெடுத்து வரும் நிலையில் கடந்த மூன்று நாட்களில் 5900 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘
ஃப்ளைட் அவேர்’ எனும் விமானம் தொடர்பான விபரங்களைப் வெளியிடும் வலைத்தளத்தின் தரவுகள் மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளன.
இதன்படி கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு (டிசம்பர் 24,25, 26) ஆகிய மூன்று நாட்களில் சுமார் 5,900 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை உலகளவில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிக அளவில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. திங்கட்கிழமையும் இது போல விமானங்கள் இரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க கொரோனா வைரசின் ஒமிக்ரோன் திரிபு பரவி வருவதால் விமான சேவையை நடத்த போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை என விமான சேவை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.