5ஜி வலையமைப்பை வெற்றிகரமாகச் சோதித்த முதல் தெற்காசிய நாடு எது தெரியுமா!
5ஜி வலையமைப்பை வெற்றிகரமாகச் சோதித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ள அதேவேளை 5ஜி தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக இலங்கையில் அறிமுகப்படுத்து நிச்சயமற்றதொன்றாக இருப்பதாக தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு, உள்கட்டமைப்பு கட்டுமானம் மற்றும் சாதனங்களைப் பாதுகாப்பதில் உள்ள அதிக செலவு என்பனவே 5ஜி தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
இந்நிலையில், 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்னும் நடந்து கொண்டிருக்கிறது என்றும் இது செயற்படுத்துபவர்களுக்கு நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்றும் அமைச்சு கூறுகின்றது.
விலை அதிகம்
இருப்பினும், 5ஜி தொழில்நுட்பத்தை வணிக ரீதியாக அறிமுகப்படுத்துவதில் அரசாங்கமும் தொலைத்தொடர்பு செயற்படுத்துனர்களும் உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“நாடு முழுவதும் இந்த தொழிநுட்பத்தை உருவாக்க தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க கணிசமான முதலீடு தேவைப்படுகிறது, தவிரவும் 5ஜி-இணக்கமான சாதனங்கள் மற்றும் தரவுத் திட்டங்களின் விலை ஆரம்பத்தில் பல பயனர்களுக்கு அதிகமாக இருக்கலாம்" என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை வெற்றிகரமான நடைமுறைப்படுத்துவது முதலீடுகளை ஈர்த்து, புத்தாக்கத்தை ஊக்குவித்து, டிஜிட்டல் அணுகலை அதிகரிப்பதன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு நன்மையளிக்கும் எனவும் கூறப்படுகிறது.
சோதனை மண்டலங்கள்
இந்நிலையில் இலங்கையில் 5ஜி தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற, அதே சமயம் நம்பிக்கைக்குரிய முன்னேற்றங்கள் மற்றும் சோதனைகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவற்றிடையே 5ஜி வலையமைப்பை வெற்றிகரமாகச் சோதித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ள அதேவேளை, கடந்த ஆண்டு (2023) Dialog Axiata மற்றும் Mobitel கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் மற்றும் காலி ஆகிய இடங்களில் வரையறுக்கப்பட்ட அளவிலான 5ஜி சோதனை மண்டலங்களை அறிமுகப்படுத்தியது மாத்திரமல்லாமல் சிறிலங்கா டெலிகொம் நிறுவனம் உள்ளக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |