ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆறு பேர் பிணையில் விடுதலை
இலங்கையில் அதிகரிக்கப்பட்ட மின்சார கட்டணத்துக்கு எதிராக கொழும்பு - திவுலப்பிட்டி பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான உத்தரவை மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
காவல்துறையினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற போராட்டத்துக்கு அப்பால்பட்ட தேசிய அமைப்பின் தலைவர் பலாங்கொட கஸ்யப்ப தேரர், மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட ஆறு பேர் இன்று காலை கைது செய்யப்பட்டனர.
நீதவான் நீதிமன்றம்
இதனை தொடர்ந்து, குறித்த தரப்பினர் மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன் போது, இந்த ஆறு பேர் மீதான குற்றச்சாட்டை நீதிபதி ஆராய்ந்ததுடன், அவர்களுக்கு பிணை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.