கொழும்பில் வெடித்த போராட்டம்: காவல்துறையினருடன் முரண்பட்ட பிக்கு கைது(படங்கள்)
Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Dhilak
மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டியில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மின்சாரம் பயன்படுத்துவோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து இந்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், போராட்டம் நடந்து கொண்டிருந்த போது காவல்துறையினருடன் முரண்பட்டதன் காரணமாக ஒரு பிக்கு உட்பட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது நடவடிக்கை
இதன்போது, பலாங்கொட கஸ்ஸப தேரர், மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க உள்ளிட்ட நால்வரே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, போராட்டம் காரணமாக கொழும்பு திவுலபிட்டிய பிரதான வீதி முற்றாக தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்