பேருந்தை முந்திச் செல்ல முற்பட்டவேளை நிகழ்ந்த அனர்த்தம்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
தங்காலை ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் இன்று (04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.
அம்பலாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற சிறிய காரொன்றும், ஹுங்கமவில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற வானும் மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
பேருந்தை முந்திச் செல்லமுற்பட்டபோது
கிவுல பிரதேசத்தில் பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் பயணிகள் பேருந்தை நிறுத்திய போது, பின்னால் வந்த வான் நிறுத்த முடியாமல் பேரந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த காருடன் மோதியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக எதிரே காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி