சட்டவிரோதமாக நியூஸிலாந்து செல்ல முயன்ற தமிழர் பகுதியை சேர்ந்தவர்கள் சிக்கினர்
police
sri lanka
people
By Shalini
சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த அனைவரும் திருகோணமலை காவல்துறை பிரிவுக்குட்பட்ட துறைமுக வீதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்து கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
ஒரு பெண், 4 வயதுடைய குழந்தையும் இவர்களுடன் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.