ட்ரம்பின் அயர்லாந்து விஜயம்...! மக்களிடையே எழுந்துள்ள பலத்த எதிர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அயர்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், அவரது வருகைக்கு அயர்லாந்து மக்களிடையே பலத்த எதிர்ப்பும் அதிருப்தியும் கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சண்டே இண்டிபெண்டன்ட் (Sunday Independent) மற்றும் அயர்லாந்து திங்க்ஸ் (Ireland Thinks) அமைப்புகள் இணைந்து இது தொடர்பில் கருத்து கணிப்பொன்றை நடத்தியுள்ளது.
இனப்படுகொலைக்கு வசதி
நடத்திய கருத்துக்கணிப்பில், அயர்லாந்து மக்களில் 69 சதவீதத்தினர் ட்ரம்பின் இந்த வருகைக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
டப்ளின் டிரினிட்டி கல்லூரியின் (Trinity College Dublin) பொருளாதாரத் துறை மாணவரும், அயர்லாந்தின் BDS (பாய்காட், டைவெஸ்ட்மென்ட், சாங்க்ஷன்ஸ்) இயக்கத்தின் தலைவருமான ஷான் ராட்க்ளிஃப் (Sean Radcliffe) இது குறித்து ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒருவரை சாதாரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்துவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அயர்லாந்து பிரதமர் (Taoiseach) மைக்கேல் மார்ட்டின் (Micheal Martin), அமெரிக்கா இனப்படுகொலைக்கு வசதி செய்து கொடுத்து உதவி வருகிறது என்பதை பகிரங்கமாகவும் உறுதியாகவும் வெளிப்படையாகக் கூற வேண்டும் என்றும் மாணவர் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறை காரணமாகவே அயர்லாந்து மக்களிடையே ட்ரம்பின் இந்த வருகைக்கு எதிரான அதிருப்தி வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |