சொகுசு பேருந்தை மறித்து சாரதி, நடத்துநரை தாக்கிய சம்பவம் தொடர்பில் ஆறு சந்தேக நபர்கள் கைது
Kalutara
Sri Lanka Magistrate Court
Arrest
By Sindu
களுத்துறை-கொழும்பு பிரதான வீதியில் உள்ள நாகஸ் சந்திப்புப் பகுதியில், மோட்டார் சைக்கிள்களில் வந்த ஒரு கும்பல் சொகுசுப் பேருந்தை வழிமறித்து, அதன் சாரதி மற்றும் நடத்துனரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக, களுத்துறை வடக்கு காவல்துறையினர் ஆறு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
தாக்குதலை நடத்துவதற்கு சந்தேக நபர்கள் பயன்படுத்திய இரண்டு மோட்டார் சைக்கிள்களும் காவல் துறையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றில் முன்னிலை
கைது செய்யப்பட்டவர்கள் வடுவ மற்றும் மொரொந்துடுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். இச்சம்பவம் குறித்து களுத்துறை வடக்கு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நன்றி நவிலல்