6 ஆம் வகுப்பு பாடப்புத்தக பொருத்தமற்ற இணையதளம் - கல்வி அமைச்சிடம் அறிக்கை
6 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடக் கையேடு தொடர்பாக நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை கல்வி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆங்கிலப் பாடக் கையேட்டில் பொருத்தமற்ற இணையதளமொன்றின் பெயர் எவ்வாறு சேர்க்கப்பட்டது என்பது குறித்து தேசிய கல்வி நிறுவனம் (NIE) மூலமாக தனியான விசாரணை ஒன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.
ஆங்கிலப் பாடக் கையேடு
இச்சம்பவத்திற்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய மற்றுமொரு விசாரணைக் குழு விரைவில் நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, 6 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடக் கையேட்டை விநியோகிப்பதற்கு முன்னர் அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து கல்வி அமைச்சின் நிபுணர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அவர்கள் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில், 6 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடக் கையேட்டை மாணவர்களிடம் கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் விரைவாக எடுக்கப்படவுள்ளன.
விசாரணை
கல்வி அமைச்சின் செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், இச்சம்பவம் குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்னெடுத்து வரும் விசாரணைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

புலனாய்வு அதிகாரிகள் இதுவரையில் தேசிய கல்வி நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |