தெவுந்தரவில் ஒருவர் சுட்டுக் கொலை! விசாரணைகள் தீவிரம்
புதிய இணைப்பு
கந்தர காவல்துறை பிரிவின் தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் இன்று (21) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
முதலாம் இணைப்பு
கந்தர காவல்துறை பிரிவின் தெவுந்தர பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு அருகில் இன்று (21) பிற்பகல் துப்பாக்கிச்சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், அவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
சாம்பல் நிற காரில் வந்த ஒரு குழு துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருப்பதாக தெரியவருகிறது.
மேலதிக விசாரணை
இந்த நிலையில், இரண்டு 9 மிமீ துப்பாக்கிகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர், 'டிலைட்' என்று அழைக்கப்படும் 55 வயதுடைய மீன் வியாபாரி என்று கூறப்படுகிறது.
இந்த நபர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |