மன்னாரில் கடற்படை கொடூர தாக்குதல்- 7 மீனவர்கள் படுகாயம் (படம்)
சிறிலங்கா கடற்படை தாக்குதல்
மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீது பேசாலை கடற்படையினர் கொடூர தாக்குதல் நடத்திய நிலையில் 7 மீனவர்கள் பலத்த காயங்களுடன் பேசாலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக தெரிய வருகையில்,
மன்னார் பேசாலை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மற்றும் கடற்படையினர் மத்தியில் அனுமதிப்பத்திரம் பரிசோதிக்கும் இடத்தில் ஏற்பட்ட சிறிய வாய்த்தர்கம் காரணமாக அப்பகுதியில் நேற்று காலை (வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இணைந்து குறித்த பிரச்சினையை சமரசப்படுத்திய நிலையில் மீனவர்கள் கடல் தொழிலுக்கு சென்றுள்ளனர்.
மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
அவ்வாறு சென்ற மீனவர்கள் கடலில் கடற்படையினரால் தடுக்கப்பட்டு பின்னர் இரண்டாம் தீடையில் இறக்கப்பட்டு கடற்படையினரால் சரமாரியாக தாக்கப்பட்டுள்ளனர் அவ்வாறு தாக்கப்பட்ட 7 மீனவர்களும் உடலில் பலத்த காயங்களுடன் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

