சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்பட்ட பயணிகள் பேருந்து சேவை
கொழும்பு பீப்பள்ஸ் பார்க் (People's Park) பகுதியிலிருந்து சட்டவிரோதமான முறையில் பயணிகள் போக்குவரத்து முன்னெடுக்கப்படுவது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்தவகையில், நேற்று (11.04.2026) இரவு முன்னெடுத்த சோதனையின் போது 7 பேருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஷெரின் அத்துகோரல தெரிவித்துள்ளார்.
ஹற்றன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய இடங்களுக்கு பயணிக்கும் குறித்த பேருந்துகளே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளன.
சட்டபூர்வ போக்குவரத்து வசதி
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், குறித்த பேருந்துகள் பயணிகளிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக பணம் வசூலித்துள்ளதோடு, முறையான அனுமதிப்பத்திரம் இன்றியும் சேவையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

மத்திய பேருந்து நிலையம், பெஸ்டியன் மாவத்தை முனையம் மற்றும் அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் இலங்கை போக்குவரத்துச் சபை ஊடாக உங்களுக்கான சட்டபூர்வ போக்குவரத்து வசதிகளை நாம் தயார் செய்துள்ளோம்.
சட்டவிரோத சேவைகளைப் பயன்படுத்தினால் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதுடன் பாதுகாப்பற்ற நிலையும் உருவாகும். எனவே பண்டிகைக் காலங்களில் சட்டவிரோத பேருந்துகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு அனைத்துப் பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு மீட்கப்பட்ட 7 பேருந்துகளை காவல்துறை ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |