ஹெரோயின் போதைப்பொருளுடன் புத்தளத்தில் ஒருவர் கைது!
புத்தளம் பகுதியில் அதிகளவிலான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை, மொனராகலை விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் விற்பனை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சந்தேகநபரிடமிருந்து 84 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின், இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனைக்காகப் பயன்படுத்தப்படும் தராசு என்பன காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மொனராகலை விஷப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்ட அதிகளவிலான ஹெரோயின் இதுவெனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |