கிறிஸ்தவ பேரணியில் கட்டவிழ்க்கப்பட்ட வன்முறை - ஹைதி நாட்டில் 7 பேர் பலி
Crime
Death
By Kathirpriya
ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்-ஓ-பிரின்சின் வடக்கு புறநகர்ப் பகுதியில்கிறிஸ்தவ பேரணி ஒன்று பாதிரியார் ஒருவரின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
குறித்த பேரணியில் ஏராளமான கிருஸ்தவர்கள் கலந்து கொண்டு அணிவகுத்துச் சென்றனர்.
அந்த வேளை பேரணிக்குள் புகுந்த கிளர்ச்சிக் குழுவினரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
உள்ளூர் ஊடகங்கள் தகவல்
இந்த துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி 7 பேர் உயிரிழந்துள்ளனர், இந்த தாக்குதல் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வெகுவாக பகிரப்பட்ட வண்ணம் உள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 10 பேர் வரை கொல்லப்பட்ட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.