கந்தகாட்டிலிருந்து தப்பிச் சென்றவர்கள் தொடர்பில் வெளியான தகவல்
Sri Lanka Army
Polonnaruwa
Sri Lanka
By Sumithiran
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து தப்பிச் சென்றவர்களில் இதுவரை ஏழுபேர் சரணடையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆறாம் திகதி கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரண்டு குழுக்களுக்கிடையேயான மோதலை அடுத்து அங்கிருந்து பல கைதிகள் தப்பிச் சென்றிருந்தனர்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் பலர் மீண்டும் சரணடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இதுவரை சரணடையாதோர்
இந்த நிலையில் தப்பிச்சென்றவர்களில் ஏழுபேர் இதுவரை சரணடையவில்லை என புனர்வாழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு சரணடையாதவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி