கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Thulsi
மேல் மாடியிலிருந்து கொங்க்ரீட் துண்டு விழுந்ததில் 7 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் கொழும்பு (Colombo) - முகத்துவாரம் பகுதியில் அமைந்துள்ள வீடமைப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது.
பராமரிப்பு குறைபாடுகள்
ஆரம்ப அறிக்கைகளின்படி, சிறுவன் தனது பாட்டியுடன் வீட்டு வளாகத்திற்கு அருகிலுள்ள ஒரு கடைக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது, கான்கிரீட் ஸ்லாப்பின் துண்டுகள் உடைந்து விழுந்ததால், பலத்த காயம் ஏற்பட்டது.

படுகாயமடைந்த சிறுவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த கட்டடத் தொகுதியின் உறுதி மற்றும் பராமரிப்பு குறைபாடுகள் குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி