முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்

Sri Lanka Education School Children
By Thulsi Feb 05, 2026 08:20 AM GMT
Report

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்

தங்க விலையில் அதிரடி உயர்வு : ஒரே நாளில் இரு தடவைகள் மாற்றம்

ஆரம்பக் கட்ட அனுமதி

2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது.

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் | Fall In First Year Student Admissions Moe

இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது.

முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும்.

குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது.

மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது.

ஐயோ தயாசிறி அமருங்கள்...! நகைச்சுவை கருத்துக்களால் எதிர்க்கட்சி மீது பிமல் விமர்சனம்

ஐயோ தயாசிறி அமருங்கள்...! நகைச்சுவை கருத்துக்களால் எதிர்க்கட்சி மீது பிமல் விமர்சனம்

சனத்தொகை 

கொழும்பு மாவட்டம்: 2023 இல் 325,525 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை, 2025 இல் 305,506 ஆகக் குறைந்துள்ளது, இது சுமார் 6.15 வீத வீழ்ச்சியாகும். கம்பஹா மாவட்டம்: 317,617 இலிருந்து 297,307 ஆக மாணவர் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் | Fall In First Year Student Admissions Moe

கண்டி மாவட்டம்: 2023 இல் 263,951 ஆக இருந்த மாணவர்கள், 2025 இல் 252,916 ஆகக் குறைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டம்: இங்கு மாணவர் எண்ணிக்கை 95,176 இலிருந்து 93,167 ஆகக் குறைந்துள்ளது (சுமார் 2.1 வீத வீழ்ச்சி).

மட்டக்களப்பு மாவட்டம்: 117,514 இலிருந்து 117,172 ஆக மாணவர் எண்ணிக்கை மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது.

திருகோணமலை மாவட்டம்: 93,482 இலிருந்து 93,481 ஆக மாணவர் எண்ணிக்கை ஏறத்தாழ நிலையாக உள்ளது. மொழி மூல ரீதியிலான மாணவர் சனத்தொகை சிங்கள மொழி மூலம்: மாணவர்களின் எண்ணிக்கை 2,827,538 இலிருந்து (2023) 2,692,039 (2025) ஆகக் குறைந்துள்ளது.

மாணவர்களின் எண்ணிக்கை

தமிழ் மொழி மூலம்: மாணவர் எண்ணிக்கை 934,579 இலிருந்து 913,364 ஆகக் குறைந்துள்ளது. இருமொழி மற்றும் ஆங்கில மூலம்: ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கை குறைந்தாலும், ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கொண்டு கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 120,571 (2023) இலிருந்து 142,141 (2025) ஆக 17.9 வீத வளர்ச்சி கண்டுள்ளது.

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் | Fall In First Year Student Admissions Moe

பாடசாலை வகைகளின் அடிப்படையில் மாணவர் பரம்பல் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவு உள்ள 1ஏபி பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 1,544,233 இலிருந்து (2023) 1,549,882 (2025) ஆக ஒரு சிறிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதேசமயம், தரம் 5 வரையான ஆரம்பப் பாடசாலைகளில் (வகை 3) மாணவர் எண்ணிக்கை 611,427 இலிருந்து 580,649 ஆகக் குறைந்துள்ளது.

இலங்கையின் கல்வித்துறையில் மொத்த மாணவர் அனுமதி மற்றும் முதலாம் தரச் சேர்க்கை ஆகியவை மாவட்ட ரீதியாகப் பரவலாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், ஆங்கில மொழி மூலக் கல்வி மற்றும் உயர்தர விஞ்ஞானப் பாடப்பிரிவுகளைக் கொண்ட 1ஏபி பாடசாலைகளில் மாணவர்களின் ஆர்வம் அல்லது அனுமதி முன்னரை விட சற்று அதிகரித்துள்ளது அல்லது நிலையாக உள்ளது எனலாம்.

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான் - தங்கச்சி.... : நிர்மலா சீதாராமனுக்கு கமல் எடுத்துரைப்பு

தமிழன் பிச்சை எடுக்க மாட்டான் - தங்கச்சி.... : நிர்மலா சீதாராமனுக்கு கமல் எடுத்துரைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    



ReeCha
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026