இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பு..!
Breast Cancer
Sri Lanka
By Beulah
இலங்கையில் மார்பக புற்றுநோயால் வருடாந்தம் 700-800 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டளவில் இலங்கையில் 5,189 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் ஆலோசகர் சமூக வைத்தியர் டாக்டர் சுராஜ் பெரேரா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அதவாது, ஒரு நாளைக்கு 14பேர் இந்நோய்க்காக சிகிச்சை பெற பதிவு செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மாதாந்த சிகிச்சை
நோய்நிலமையின் ஆரம்ப கட்டங்களிலேயே அதனை அறிந்து சிகிச்சை மேற்கொள்வது நோயை கட்டுப்படுத்த உதவும் என்பதோடு, நோய்வாய்ப்பட்ட சுமார் 10,000 பெண்களுக்கு முழுமையாக சிகிச்சையளிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

அத்துடன், 20 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்திர மார்பகப் புற்றுநோய் பரிசோதனை அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்