விறுவிறுப்பில்லாத தேர்தல் களம் : பிரசாரத்தில் இருந்து ஒதுங்கிய 7000 வேட்பாளர்கள்
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள 8,000 வேட்பாளர்களில் 7,000 பேர் எந்தவொரு பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையின் பவ்ரல் (PAFFREL)அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் தேர்தல் கண்காணிப்பாளர்களின் தகவலின்படி, 1000க்கும் குறைவான வேட்பாளர்கள் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை
ஐந்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்களைத் தவிர ஏனைய கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் எவரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐந்து பிரதான கட்சிகளின் பெரும்பாலான வேட்பாளர்கள் தேர்தல் செலவுச் சட்டத்தின்படி பிரசார செலவுகளை கட்டுப்படுத்தியுள்ளனர்.
பிரதான கட்சிகளின் பெரும்பான்மையான வேட்பாளர்கள்
ஐந்து பிரதான கட்சிகளின் பெரும்பான்மையான வேட்பாளர்கள் கிராம மட்டத்தில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டுள்ளதாகவும் இதன் காரணமாக வேட்பாளர்களின் பொதுத் தேர்தல் பிரசாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் 192 பேர் மாத்திரமே தெரிவு செய்யப்படுவார்கள் எனவும், அவர்களில் 98 வீதமான வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |