வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 73 குழந்தைகள் உயிரிழப்பு
children
died
Vavuniya hospital
last year
By Vanan
வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 73 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
24 குழந்தைகள் தாயின் வயிற்றுக்குள்ளேயே உயிரிழந்துள்ளதுடன், 3 குழந்தைகள் பிறக்கும் போது உயிரிழந்துள்ளன.
அத்துடன், சிறுவர்களுக்கான விசேட பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 46 குழந்தைகள் கடந்த ஆண்டு உயிரிழந்துள்ளன.
வவுனியா பொது வைத்தியசாலையில் கடந்த 7 வருடங்களில் மாத்திரம் 368 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தகவல் வழங்கியுள்ளது.
