இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களிடமிருந்து நாட்டுக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 735.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அத்துடன் கடந்த செப்டெம்பர் மாதம் 734.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவான தொழிலாளர் பணவனுப்பல்கள், ஒக்டோபர் மாதத்தில் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கைத் தொழிலாளர்கள்
கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பதிவான 712 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு ஒக்டோபரில் 23.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அதிகரித்துள்ளன.

இதன்படி, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், வெளிநாட்டு வாழ் இலங்கைத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் சுமார் 3.3 சதவீதத்தால் அதிகரித்துள்ளன.
இலங்கையின் வெளிநாட்டு நாணய வருமானத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும் தொழிலாளர் பணவனுப்பல்கள், நாட்டின் வெளிநாட்டு நிதி நிலைமையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |