வியட்நாமில் 50 வருடங்களாக உணவு உண்ணாமல் வாழும் பெண்!
வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண்ணொருவர் 50 வருடங்களாக உணவருந்தாமல் உயிர் வாழ்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
குவாங் பின் மாகாணத்தில் உள்ள புய் தி லோய்(Bui Thi Loi) என்ற 75 வயது பெண்ணே இவ்வாறு உணவுகளை உண்ணாமல் தண்ணீர் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களை மட்டுமே உட்கொண்டு உயிர்வாழ்ந்து வருகின்றார்.
இந்த 75 வயதான பெண் அவரது வயதிற்கு ஏற்றவாறு தோற்றமளிகின்றார்.
நீர் உணவுகளை மட்டும் உண்ணல்
1963 இல் அவரும் மற்ற பெண்களும் போரின் போது காயமடைந்த வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க மலையின் மீது ஏறிக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.
அப்போது மயக்கமடைந்த பின்னர் பல நாட்களுக்கு பின்பு சுய நினைவுக்கு வந்த போது உணவு அருந்தவில்லை.
அப்போது நண்பர்கள் அவருக்கு இனிப்புத் தண்ணீரைக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.அதன் பின்னர் அவர்களது குடும்பத்தினர் வற்புறுத்தியதால் பழங்களை உணவாக உட்கொண்டுள்ளார்.
1970ஆம் ஆண்டிற்கு பின்னர் அவர் திட உணவைத் தவிர்த்ததோடு தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை மட்டுமே அருந்தி வருகின்றார்.
வித்தியாசமான உணவு பழக்கம்
அவரது குளிர்சாதனப் பெட்டி தண்ணீர் போத்தல்கள் மற்றும் சர்க்கரை கலந்த குளிர்பானங்களால் நிரம்பி காணப்படுகின்றது.
தனது குழந்தைகளுக்காக சமைத்தாலும் ஒரு போதும் அந்த உணவுகளை உண்டது இல்லையென கூறுகின்றார்.
இவரது வித்தியாசமான உணவு பழக்கத்தினால் ஒருபோதும் தன் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை, மேலும் மற்றவர்களிடம் பால் கேட்க வேண்டியிருந்தது என தெரிவித்திருந்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |