மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் இருந்து தோட்டாக்கள் மீட்பு
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 தோட்டாக்கள்05 மற்றும் 9mm தோட்டாக்கள்03 கண்டெடுக்கப்பட்டதாக மருதான காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மருதானை காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, கொழும்பு தேசிய மருத்துவமனையின் பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளை ஆய்வு செய்தபோது தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டன.
பெட்ரோல் தாங்கியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்பு
மோட்டார் சைக்கிளில் வெள்ளைப் பொடி அடங்கிய பார்சலும் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் தாங்கியில் உள்ள கவரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தோட்டாக்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செஞ்சோலை… ஈழக் குழந்தைகளுக்காய் தலைவர் கட்டிய கூடு 14 மணி நேரம் முன்