கொழும்பை அதிர வைக்கவுள்ள மே தின பேரணிகள்
கொழும்பு நகரை மையமாகக் கொண்டு 8 முக்கிய மே தினக் கூட்டங்கள் நடத்தப்படவுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதன்படி, சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் பேரணி பொரளை கெம்பல் மைதானத்திலும், ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி பெட்டகொடோவில் உள்ள கெசல்வத்த ஏ. இ. குணசிங்க விளையாட்டரங்கில், தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணி. ஆர். சேனநாயக்க மாவத்தை நகரசபை விளையாட்டரங்கில், ஐக்கிய சோசலிசக் கட்சியின் பேரணி கிராண்ட்பாஸ் மைதானத்தில், உத்தர லங்கா கூட்டணியின் மே தினப் பேரணி கொழும்பு ஹைட் பார்க்கில், சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் சங்க பேரணி மாளிகாவத்தையில் பி. டி. சிறிசேன விளையாட்டரங்கில், முன்னிலை சோசலிசக் கட்சியின் பேரணி நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கிலும், இலங்கை வங்கியின் பேரணி கொம்பக்கந்தவீதிய ஸ்டான்லி ஜான்ஸ் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு மே தின பேரணிக்கும் அதிகபட்ச காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
மேலும், மறைந்த முன்னாண் அதிபர் ஆர். பிரேமதாசவின் 30வது மரணத்தை நினைவு கூரும் நிகழ்வு மே 1ஆம் திகதி கெசல்வத்தையில் உள்ள அளுத்கடே சிலைக்கு அருகாமையிலும் முன்னாள் அதிபர் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட கவச வீதியில் உள்ள நினைவுத்தூபிக்கு அருகாமையிலும் நடைபெறவுள்ளன.
