வடக்கு காசாவில் காலைவேளை நடத்தப்பட்ட தாக்குதல் : 80 ற்கும் மேற்பட்டவர்கள் பலி (காணொளி)
வடக்கு காசாவில் இன்று காலை (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள்,குழந்தைகள் உட்பட 80 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 200ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு காசா பகுதியில் பொதுமக்களின் குடியிருப்புக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஜசீரா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனை மீதும் குண்டுவீச்சு
இதேவேளை, வடக்கு காசா பிராந்தியத்தில் உள்ள இந்தோனேசிய மருத்துவமனையை இஸ்ரேல் படையினர் தொடர்ந்து முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
Massive destruction at the Beit Lahia housing project in northern Gaza.
— The Palestine Chronicle (@PalestineChron) November 21, 2023
FOLLOW OUR LIVE BLOG: https://t.co/EWyzXaTflT pic.twitter.com/98FFg1cc3j
செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மருத்துவமனை மீது நேரடியாக குண்டுகளை வீசியதாக காசாவில் உள்ள அரசாங்க ஊடக அலுவலகத்தின் தலைவர் அல்-ஜசீராவிடம் கூறினார்.
நிர்க்கதியான 500ற்கும் மேற்பட்ட நோயாளிகள்
இஸ்ரேல் படையினரின் முற்றுகை காரணமாக 550 நோயாளிகள் இந்தோனேசிய மருத்துவமனைக்குள் உரிய சிகிச்சை பெறாமல் தற்போது முற்றுகையிடப்பட்டுள்ளனர் என காசா சுகாதார அமைச்சின் பணிப்பாளர் டொக்டர் முனிர் அல்-புர்ஷ் அல்-ஜசீராவிடம் தெரிவித்தார்.
Israeli tanks are now besieging the Indonesian Hospital in northern Gaza. pic.twitter.com/GXW7z3T1BU
— Quds News Network (@QudsNen) November 21, 2023
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |