இலங்கையில் மாகாணமொன்றில் கண்டறியப்பட்ட ஆயிரக்கணக்கான காசநோயாளிகள்
மேல் மாகாணத்தில்(western province) ஏறக்குறைய எட்டாயிரம் பேர் காசநோய்க்கு(tuberculosis) ஆளாகியிருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக காசநோய் தடுப்பு தேசிய வேலைத்திட்டத்தின் சுகாதார கல்வி அதிகாரி சந்தியா குமுதுனி தெரிவித்தார்.
இருமல் நீடித்தால், பதினைந்து நாட்களுக்குப் பிறகு, உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று சளி பரிசோதனை செய்வது நல்லது எனவும் அவர் குறிப்பிட்டார்.
காலியில் நடைபெற்ற சுகாதார கல்வி கண்காட்சியில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வெட்கப்படதேவையில்லை
2035ஆம் ஆண்டளவில் இலங்கையில் இருந்து காசநோயை இல்லாதொழிப்பதே எமது நோக்கமாகும். இந்த நோய் குறித்து அடிமட்ட அளவில் எவ்வளவோ விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், வெட்கத்தால் நோய் நிலை மறைக்கப்படுகிறது.
இரு வாரங்களுக்கு மேல் இருமல்
அத்துடன் நோய்க்கு தேவையான அனைத்து பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை எந்த அரசு மருத்துவமனையிலிருந்தும் இலவசமாக பெற்றுக்கொள்ளும் வசதியுடன், தேவையான மருந்துகளும் எங்களிடம் உள்ளன. சிகிச்சைக்காக யாரும் பணம் செலவழிக்க வேண்டியதில்லை” என்றார்.
இரு வாரங்களுக்கு மேல் இருமல் நீடித்தால் கண்டிப்பாக அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து ஆறு மாதத்தில் குணமடைய வாய்ப்பு உள்ளது எனஅவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |