மூடப்பட்ட 81 அரச பாடசாலைகள்: கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்
Ministry of Education
A D Susil Premajayantha
Education
By Shadhu Shanker
சுமார் 81 அரச பாடசாலைகள் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (10.05.2024) முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மூடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மாகாண சபைகளின் கீழ் செயற்பட்டவை .
மூடப்பட்ட பாடசாலைகள்
மற்றும், அவற்றின் பௌதீக வளங்களை வேறு பயனுள்ள தேவைகளுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், அவ்வாறான ஒரு சில பாடசாலைகள் வேறு கல்வித் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி