இயற்கை பேரழிவால் செயலிழந்த மின்விநியோகம் : வெளியான அறிவிப்பு
Power cut Sri Lanka
Ceylon Electricity Board
Flood
By Sumithiran
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட மின்வெட்டுகளில் சுமார் 86% தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த வானிலை காரணமாக 7.3 மில்லியன் மின்சார நுகர்வோரில் சுமார் 3.9 மில்லியன் பேருக்கு மின்வெட்டு ஏற்பட்டதாக அதன் துணை பொது முகாமையாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
மின்விநியோகத்தை சீரமைக்க கடுமையாக உழைக்கும் ஊழியர்கள்
மின்சார விநியோகத்தை மீட்டெடுக்க மின்சார சபை ஊழியர்கள் கடந்த சில நாட்களாக கடுமையாக உழைத்து வருவதாக துணை பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, விரைவில் மின் விநியோக முறையை முழுமையாக மீட்டெடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஒதியமலைப் படுகொலை அன்றோடு முடிந்துவிடவில்லை! 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16, 10ம் ஆண்டு நினைவஞ்சலி